< Back
தேசிய செய்திகள்
மத்தியப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து..!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து..!

தினத்தந்தி
|
16 July 2022 2:34 PM IST

ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரத்லம்,

மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.

நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அங்கு ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு நிவாரண ரெயில் அனுப்பப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது. ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்