< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா: சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சோகம் - பலர் படுகாயம்
தேசிய செய்திகள்

கர்நாடகா: சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சோகம் - பலர் படுகாயம்

தினத்தந்தி
|
5 Sept 2024 3:15 PM IST

அரசுப் பேருந்து மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுக்காவில் உள்ள கபகல் என்ற பகுதி அருகே அரசுப் பேருந்து மீது தனியார் பள்ளி வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் சிக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களாக சமர்த் (7) மற்றும் ஸ்ரீகாந்த் (12) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 32 குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பள்ளி மாணவர்கள் கவலைக்கிடமாகநிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்