< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய சிறுவர்கள் ரெயில் மோதி பலி
|1 Sept 2024 3:01 PM IST
தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ரெயில் மோதி உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் டிரக் மாவட்டம் ரிசலி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் வீர் சிங் , புரன் ஷகு (வயது 14). சிறுவர்கள் இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் ரிசலி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர்.
அப்போது, அந்த தண்டவாளத்தில் ரெயில் வந்துள்ளது. ரெயில் வருவதை கவனிக்காத சிறுவர்கள் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர். இதனால், அதிவேகமாக வந்த ரெயில் சிறுவர்கள் மீது மோதியது. இச்சம்பவத்தில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.