< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி.யில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது
|16 Jan 2023 4:30 AM IST
உத்தரபிரதேசத்தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மௌவில் சகோதரர்களான இருவர், மாந்திரீக பயத்தை காட்டி, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள், தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால், மாந்திரீகத்தின் மூலம் உன் வீட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக கூறி சிறுமியை சீரழித்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சிறுமியை கடத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரையும் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்த போலீசார், பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமி மௌ மாவட்டத்தின் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.