< Back
தேசிய செய்திகள்
வாகனம் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து - 2 ராணுவ வீரர்கள் படுகாயம்
தேசிய செய்திகள்

வாகனம் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து - 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

தினத்தந்தி
|
21 July 2023 5:46 AM IST

காஷ்மீரில் மரம் ஒன்று முறிந்து ரோந்துப்பணி மேற்கொண்ட ராணுவ வாகனங்களின் மீது விழுந்தது.

ஜம்மு,

காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் வழக்கமான ரோந்துப்பணி மேற்கொள்ள ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. வனப்பகுதி சாலையில் அவை சென்றபோது மரம் ஒன்று முறிந்து ராணுவ வாகனங்களின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராணுவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பயங்கரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்