< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் இரட்டை குண்டு வெடிப்பு; பாரத் ஜோடோ யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு
|22 Jan 2023 11:11 AM IST
ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராகுல் காந்தி பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஸ்ரீநகர்,
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமைப் பயணம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தற்போது காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில், ஜம்முவின் புறநகர் பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணத்தினால் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிராநகர் பகுதியிலிருந்து தொடங்கியது. இதனால், ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராகுல் காந்தி பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.