< Back
தேசிய செய்திகள்
எறும்புத்தின்னி செதிலை விற்க முயற்சி; 2 பேர் கைது
தேசிய செய்திகள்

எறும்புத்தின்னி செதிலை விற்க முயற்சி; 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 Jun 2022 9:16 PM IST

மடிகேரியில் எறும்புத்தின்னி செதிலை விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடகு;


குடகு மாவட்டம் மடிகேரியில் வனப்பகுதிகளில் வேட்டையாடிய எறும்புத்தின்னி செதிலை விற்க முயல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் 2 பேர் கையில் சாக்குப்பையுடன் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து 2 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்த சாக்குப்பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது சாக்குப்பையில் எறும்புத்தின்னியின் செதில்கள் இருந்தது.

இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், அதேப்பகுதியை சேர்ந்த மனோஜ், இம்தியாஸ் என்பது தெரியவந்தது. வனப்பகுதிகளில் இருந்து எறும்புத்தின்னியை வேட்டையாடி அதன் செதில்களை விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 17½ கிலோ எறும்புத்தின்னி செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்