< Back
தேசிய செய்திகள்
மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயற்சி; ஆட்டோ டிரைவர் கைது
தேசிய செய்திகள்

மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயற்சி; ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
4 Aug 2022 8:37 PM IST

தீர்த்தஹள்ளி அருேக மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா;

மைனர் பெண்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாளூர் கிராமத்தில் மைனர் பெண் ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இதே போல் பல்லாரியை சேர்ந்தவர் மனு(வயது 21). ஆட்டோ டிரைவர். மைனர் பெண்ணுக்கும், மனுவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் உண்டாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதைதொடர்ந்து மனு, மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து மைனர் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள், மைனர் பெண்ணை கண்டித்து உள்ளனர்.

ஆனால் மனு, மைனர் பெண் திருமணம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் அவா்களுக்கு புத்திமதி கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது

இந்த நிலையில் 2 பேரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதாவது மனு பல்லாரியில் இருந்து தீர்த்தஹள்ளிக்கு வந்து மைனர் பெண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து மைனர் பெண், வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இதையறிந்த பெற்றோர், மைனர் பெண்ணை பின்தொடர்ந்து சென்று மனுவை பிடித்து மாளூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார், மனுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மைனர் பெண்ணுக்கு புத்திமதி கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்