< Back
தேசிய செய்திகள்
மான் கொம்புகள் விற்க முயற்சி; 2 பேர் கைது
தேசிய செய்திகள்

மான் கொம்புகள் விற்க முயற்சி; 2 பேர் கைது

தினத்தந்தி
|
19 Sept 2022 12:30 AM IST

சிக்கமகளூருவில் மான் கொம்புகள் விற்க முயற்சித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு டவுன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் ஒரு காரில் மான் கொம்புகளை கடத்தி சென்று விற்பனை செய்ய முயற்சிப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக கார் ஒன்று வந்தது. அந்த காைர போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் மான் கொம்புகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து காருக்குள் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டி.பி.காலனியை சேர்ந்த விஸ்வநாத்(வயது 25), மல்லேதேவரஹள்ளியை சேர்ந்த வினோத்ராஜ்(27) ஆகியோர் என்பதும், மான் கொம்புகளை காரில் கடத்தி விற்க முயன்றதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 4 மான் கொம்புகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்