< Back
தேசிய செய்திகள்
பெண்ணை கடத்த முயன்ற 4 பேர் கைது
தேசிய செய்திகள்

பெண்ணை கடத்த முயன்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 1:55 AM IST

கலபுரகியில் பெண்ணை கடத்த முயன்ற ௪ பேரை போலீசார் கைது செய்தனர்.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா புறநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி மங்களா. இவர் அரசு பள்ளி ஒன்றில் முதல்நிலை உதவியாளராக உள்ளார். இவர் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இதற்காக அவர் குறிப்பிட்ட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று, அதிக லாபம் தருவதாக கூறி மோசடி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணிடம் இருந்து ரூ.21 லட்சத்தை பெற்று உள்ளார். மேலும் அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.

இதற்கிடையே பல மாதங்கள் ஆகியும் எந்த லாபத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாவித்திரி, மங்களாவை சந்தித்து தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மங்களா, தனது கூட்டாளிகளை வைத்து சாவித்திரியை காரில் கடத்த முயன்றார். இதுகுறித்து அறிந்த சாவித்திரியின் மகன், போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். மேலும் சாவித்திரியை மீட்டனர். இதுதொடர்பாக தயானந்த், மங்களா, நபமிசாப் மற்றும் ராஜ்குமார் ஆகியேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்