< Back
தேசிய செய்திகள்
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
தேசிய செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

தினத்தந்தி
|
13 Aug 2022 8:54 PM IST

சிவமொக்காவில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

சிவமொக்கா;


தாவணகெரே மாவட்டம் நியாம்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 22). இவரது நண்பர் மல்லிகார்ஜூன் (30). இவர்கள் 2 பேரும் அப்பலகெரே பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர். தினமும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராம்குமார் ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அப்பலகெரே பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்ற லாரியின் பின்பகுதியில் இவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்