< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் 4 பேரை விபத்தில் பலி கொண்ட லாரி ஓட்டுனர் உ.பி.யில் கைது
தேசிய செய்திகள்

டெல்லியில் 4 பேரை விபத்தில் பலி கொண்ட லாரி ஓட்டுனர் உ.பி.யில் கைது

தினத்தந்தி
|
21 Sept 2022 8:33 PM IST

டெல்லி சாலை பிரிப்பானில் படுத்து தூங்கிய 4 பேர் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுனர் உ.பி.யில் கைது செய்யப்பட்டு உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் சீமாபுரி பகுதியில் சாலையின் நடுவில் உள்ள சாலை பிரிப்பானில் சிலர் படுத்து தூங்கி உள்ளனர். இந்த நிலையில், அந்த வழியே வந்த லாரி ஒன்று இன்று அதிகாலை 1.51 மணியளவில் அவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். மற்றொரு நபர் சிகிச்சை அளிக்க தொடங்கும்போது உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதில், அந்த ஓட்டுனர் உத்தர பிரதேசத்தின் ஷாம்லி நகரில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டெல்லி போலீசார் அந்த பகுதிக்கு சென்று லாரி ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்