< Back
தேசிய செய்திகள்
ஆந்திரா; சென்னையில் இருந்து சென்ற பஸ் - லாரி மோதி விபத்து: 8 பேர் பலி
தேசிய செய்திகள்

ஆந்திரா; சென்னையில் இருந்து சென்ற பஸ் - லாரி மோதி விபத்து: 8 பேர் பலி

தினத்தந்தி
|
10 Feb 2024 8:47 AM IST

சென்னை வடபழனியில் இருந்து 23 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பஸ் ஆந்திராவின் நெல்லூர் அருகே விபத்தில் சிக்கியது.

நெல்லூர்,

சென்னை வடபழனியில் இருந்து சுற்றுலா பஸ் ஒன்று 23 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சென்று கொண்டிருந்து. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் இருந்து தப்புவதற்காக லாரியின் ஓட்டுநர் வலதுபுறமாக திருப்பியபோது எதிரே வந்த சுற்றுலா பஸ் மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்