எந்த நேரத்திலும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்- ராணுவ இணை மந்திரி
|எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ இணை மந்திரி அஜய் பட் கூறியுள்ளார்.
வீரர்களின் தயார் நிலை
மத்திய ராணுவ இணை மந்திரி அஜய் பட், காஷ்மீரின் உதம்பூரில் உள்ள ராணுவத்தின் வடக்கு பிராந்திய தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வீரர்களின் தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் ராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் காலாட்படை தினத்தையொட்டி ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக வடக்கு பிராந்திய தலைைமயகத்தில் அமைக்கப்பட்டு உள்ள துருவா ேபார் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.
நேர்மறை எண்ணங்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறுகையில், 'இன்று நமது வீரர்களின் மன உறுதி மிகவும் வலுவாக உள்ளது. எந்த நேரத்திலும், எந்த சூழலையும் சமாளிக்க நாம் தயாராக உள்ளோம். சவாலான சூழல்களின் ேபாது நமது ராணுவ வீரர்கள் எப்போதும் தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறார்கள்' எனறு பெருமிதத்துடன் கூறினார்.
அவர் ேமலும் கூறும்போது, 'இன்று நாட்டின் நிலைமை மாறிவிட்டது. வளர்ச்சியின் அடிப்படையில் எதிர்மறை எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களாக மாறிவிட்டன' என்றும் தெரிவித்தார்.
நாடு பிரச்சினைகளை சந்திக்கும் போதெல்லாம் அல்லது பேரிடர்களின் போது, நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து உள்ளதாகவும் அஜய் பட் கூறினார்.