< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல்
|12 Sept 2022 1:15 PM IST
திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் தேப் ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அகர்தலா,
திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் பிப்லப் தேப். இவர் திரிபுரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிடுவார் என பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக் சஹா பதவி விலகியதும் காலியான தொகுதியில் தேப் போட்டியிடுகிறார். அடுத்த ஆண்டு திரிபுராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் சஹா, திரிபுரா முதல்-மந்திரியாகி உள்ளார்.
ராஜ்யசபை எம்.பி. தேர்தல் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ள சூழலில், தேப் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.