< Back
தேசிய செய்திகள்
திரிபுரா:  வாகன சோதனையில் ரூ.1.6 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

திரிபுரா: வாகன சோதனையில் ரூ.1.6 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
10 Jan 2024 6:50 AM IST

சட்டவிரோத கடத்தலை தடுப்பதற்காக வாகன சோதனை செய்ய, சோதனை சாவடி ஒன்றும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டது.

அகர்தலா,

திரிபுராவில் பெட் பகான் பகுதியில் அசாம்-அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்றில் போதை பொருள் கடத்தப்படுகிறது என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், திரிபுரா போலீசார், சி.ஆர்.பி.எப். பட்டாலியன் 140, 28 பட்டாலியன் அசாம் ரைபிள்ஸ் மற்றும் 3-வது பட்டாலியன் டி.எஸ்.ஆர். பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக சோதனை நடத்தினர்.

சட்டவிரோத கடத்தலை தடுப்பதற்காக வாகன சோதனை செய்ய, சோதனை சாவடி ஒன்றும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டது. இதில், லாரி ஒன்றில் ரப்பர் கட்டுகளுக்கு அடியில் காய்ந்த நிலையிலான கஞ்சா வகை போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 1,630 கிலோ எடை கொண்ட அந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.1.63 கோடி இருக்கும் என்று தலாய் போலீஸ் சூப்பிரெண்டு அவினாஷ் ராய் கூறினார்.

இதற்கு முன் தலாய் பகுதியில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கடந்த ஆண்டு ரூ.36 கோடி மதிப்பிலான சட்டவிரோத போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று 2022-ம் ஆண்டு ரூ.17 கோடி மதிப்பிலும், 2021-ம் ஆண்டு ரூ.3 கோடி மதிப்பிலும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்