< Back
தேசிய செய்திகள்
திரிபுரா சட்டசபை தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

தினத்தந்தி
|
12 Dec 2022 1:49 AM IST

திரிபுரா சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி மாணிக் சாஹா, துணை முதல்-மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா, திரிபுரா பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் பட்டாச்சார்ஜி, முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் தேவ், கட்சியின் மாநில பொறுப்பாளர் மகேஷ் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்சியினர் செயல்பாடு குறித்து அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. சட்டம், ஒழுங்கு விஷயத்தில் இரும்புக்கரம் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என முதல்-மந்திரியை கேட்டுக்கொண்டார். மேலும் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்