< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. லூயிசின்ஹோ பலேரோ ராஜினாமா
|11 April 2023 2:35 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக லூயிசின்ஹோ பலேரோ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், கோவாவின் முன்னாள் முதல்-மந்திரியுமான லூயிசின்ஹோ பலேரோ, தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாகவும், தற்சமயம் வேறு எந்த கட்சியிலும் இணைய போவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கரிடம் வழங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவா பார்வேர்டு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய்க்கு எதிராக போட்டியிட லூயிசின்ஹோ பலேரோ மறுப்பு தெரிவித்தாகவும், இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.