புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மரியாதை
|புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மரியாதை செலுத்தினார்.
பெங்களூரு:
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர், புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இழப்பு ரசிகர்கள், குடும்பத்தினரை சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் இன்று பெங்களூருவுக்கு வந்தனர்.
அவர்கள் தாங்கள் இணைந்து நடித்த லைகர் என்ற படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுக்காக வந்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சில நிமிடங்கள் அங்கு நின்ற அவர்கள் பிறகு புறப்பட்டு சென்றனர்.