< Back
தேசிய செய்திகள்
நாக்பூரில் டிராவல்ஸ் உரிமையாளரின் காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளை - போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

நாக்பூரில் டிராவல்ஸ் உரிமையாளரின் காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளை - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
31 Jan 2024 3:30 PM IST

டிராவல்ஸ் உரிமையாளரின் காரை வழிமறித்து ரூ.2 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள கோட்டேவாரா கிராமம் அருகே உள்ள வெளிவட்ட சாலையில், இன்று காலை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 2 பேர் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், மற்றொரு காரில் சில மர்ம நபர்களை அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

தொடர்ந்து டிராவல்ஸ் உரிமையாளரின் காரை வழிமறித்து நிறுத்திய அவர்கள், அந்த காரில் இருந்த ரூ.2 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அந்த கும்பலில் சுமார் 5 முதல் 6 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஹிங்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்