< Back
தேசிய செய்திகள்
டிக்கெட் இன்றி பயணம்; அக்டோபர்-டிசம்பரில் கொங்கன் ரெயில்வே ரூ.5.66 கோடி வசூல்
தேசிய செய்திகள்

டிக்கெட் இன்றி பயணம்; அக்டோபர்-டிசம்பரில் கொங்கன் ரெயில்வே ரூ.5.66 கோடி வசூல்

தினத்தந்தி
|
16 Jan 2024 9:58 PM IST

டிக்கெட் இன்றி பயணம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக புது வருடத்திலும் இந்த சோதனையானது தொடரும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மங்களூரு,

கொங்கன் ரெயில்வே அதிகாரிகள், ரெயிலில் பயணம் செய்பவர்கள் முறையாக டிக்கெட் வைத்திருக்கிறார்களா? என்று பயணிகளிடம் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இதன்படி, 2023 டிசம்பரில், ரூ.1.95 கோடி அளவுக்கு அபராத தொகையை வசூலித்து உள்ளது. இவற்றுடன் முறையான டிக்கெட் எதுவுமின்றி பயணித்த 6,675 பயணிகளிடம் இருந்து அசல் கட்டண தொகையும் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து ரூ.5.66 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 18,446 பயணிகளிடம் இருந்து ரூ.5,66,99,017 வசூலிக்கப்பட்டு உள்ளது.

டிக்கெட் இன்றி பயணம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக புது வருடத்திலும் இந்த சோதனையானது தொடரும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பயணத்தின்போது அசவுகரியம் ஏற்படாமல் இருக்க பயணிகள் முறையான டிக்கெட்டுகளுடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்