< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை உப்பள்ளி - திருப்பதி ரெயில் ரத்து
|24 Sept 2023 12:15 AM IST
இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை உப்பள்ளி - திருப்பதி ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உப்பள்ளி, செப்.24-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து திருப்பதிக்கு பயணிகள் ரெயில்(வண்டி எண்-57273/74) ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் உப்பள்ளியில் இருந்து காலை 6.27 மணிக்கு புறப்பட்டு கதக், கொப்பல், பல்லாரி வழியாக ஆந்திராவுக்குள் நுழைந்து இரவு 9.45 மணியளவில் திருப்பதியை சென்றடைகிறது. மறுமார்க்கமாக தினமும் காலை 6.95 மணிக்கு திருப்பதியில் இருந்து உப்பள்ளி நோக்கி புறப்படும் இந்த ரெயில் இரவு 9.15 மணிக்கு உப்பள்ளியை வந்தடைகிறது.
இந்த நிலையில் இந்த ரெயில் இன்று(24-ந் தேதி) முதல் வருகிற 1-ந் தேதி வரை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தென்மேற்கு ரெயில்வே மண்டல பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.