< Back
தேசிய செய்திகள்
Modi says Ithu Trailer thaan in Tamil
தேசிய செய்திகள்

இது வெறும் டிரெய்லர்தான்: இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி கருத்து

தினத்தந்தி
|
31 May 2024 9:19 PM IST

2023-24 நிதியாண்டின் நான்காம் காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி குறித்த தரவு, நமது பொருளாதாரத்தில் வலுவான வேகத்தை காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஜனவரி-மார்ச் காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் 2024-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஏற்கனவே கூறியதுபோல், இது வரவிருக்கும் விஷயங்களின் டிரெய்லர்தான். 2023-24 நிதியாண்டின் நான்காம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி குறித்த தரவு, நமது பொருளாதாரத்தில் வலுவான வேகத்தை காட்டுகிறது. கடினமாக உழைக்கும் நமது மக்களுக்கு நன்றி. 2023-24-ம் ஆண்டிற்கான 8.2 சதவீத வளர்ச்சியானது, உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்