< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: குடிசை வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு !
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: குடிசை வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு !

தினத்தந்தி
|
13 March 2023 12:44 AM IST

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கான்பூர்,

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தின் ஹரமாவு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, சதிஷ் (வயது 27). இவர் தனது மனைவி காஜல் (24) மற்றும் 3 குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இவர்களது குடிசையில் நேற்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தூங்கிக்கொண்டிருந்த சதிஷ், காஜல் மற்றும் 3 குழந்தைகளும் தீயில் கருகினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு பெண் தீக்காயம் அடைந்தார்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்