< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
தேசிய செய்திகள்

பெங்களூருவில், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
29 Jun 2023 2:55 AM IST

ஈத்கா மைதானத்தில் தொழுகையை முன்னிட்டு பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ஈத்கா மைதானத்தில் தொழுகையை முன்னிட்டு பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை

முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் பலர் தொழுகையில் ஈடுபடுவார்கள். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'லால்பாக் பிரதான நுழைவு வாயில் முதல் கென்னப்பா மெட்ரோ நிலையம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை

இதற்கு மாற்றாக ஊர்வசி, சித்தய்யா சாலை, வில்சன் கார்டன் மெயின் சாலை, ஓசூர் சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும். இதேபோல் டோல்கேட் சந்திப்பு முதல் சிர்ஷா சர்க்கிள் இடையேயும், சிட்டி மார்க்கெட் முதல் மைசூரு சாலை வரையிலும் உள்ள சாலையில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்