< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜி20 வர்த்தகம், முதலீட்டு கூட்டம் நாளை தொடக்கம்
|27 March 2023 10:58 PM IST
ஜி20யின் முதலாவது வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழு கூட்டம் மும்பையில் நாளை தொடங்க உள்ளது.
மும்பை,
இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் முதலாவது வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழு கூட்டம் நாளை (28 மார்ச் 2023) மும்பையில் தொடங்குகிறது.
மூன்று நாள் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக வர்த்தக நிதி தொடர்பான சர்வதேச மாநாடு மார்ச் 28, 2023 செவ்வாய்கிழமை நடைபெறும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த சர்வதேச மாநாட்டை இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா EXIM வங்கி ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.