< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டிராக்டர் கவிழ்ந்து விபத்து: சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி
|6 May 2024 3:33 PM IST
ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற இளைஞர் திருமண நிகழ்வுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று கொண்டிருந்தார். டிராக்டரில் மேலும் 6 சிறுவர்கள் உடன் இருந்தனர்.
அப்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச்சென்றவர் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.