< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்

தினத்தந்தி
|
7 Nov 2023 1:53 AM IST

ஒடிசா மற்றும் ஆந்திர ரெயில் விபத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரெயில்வே முழு தகவலை அளிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த ரெயில் விபத்துகள் குறித்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டையே உலுக்கிய ஒடிசா மற்றும் ஆந்திர ரெயில் விபத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரெயில்வே முழு தகவலை அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை பெற்று, நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்