< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் சந்திர கிரகணம் தொடங்கியது...!
தேசிய செய்திகள்

இந்தியாவில் சந்திர கிரகணம் தொடங்கியது...!

தினத்தந்தி
|
8 Nov 2022 4:55 PM IST

சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5.39 மணிக்கு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

இன்று முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தநிலையில், இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. முழு கிரகணத்தின் முடிவு நேரம் - 5.12 மணி ஆகும். பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் - 6.19 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படாது. கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இறுதி நிலைகளை காண வாய்ப்பு உள்ளது. சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5.39 மணிக்கு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்