< Back
தேசிய செய்திகள்
ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

தினத்தந்தி
|
17 Feb 2024 6:10 AM IST

ரூ.84,560 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

ஆயுதப் படைகளின் ஒட்டுமொத்த போர்த் திறன்களை உயர்த்தும் வகையில் மல்டி-மிஷன் கடல்சார் விமானங்கள் உட்பட ரூ.84,560 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

இந்த கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டி.ஏ.சி) ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்