< Back
தேசிய செய்திகள்
ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20 சதவீத மாணவர்கள் ஐ.ஐ.டி.களில் சேரலாம் - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20 சதவீத மாணவர்கள் ஐ.ஐ.டி.களில் சேரலாம் - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

தினத்தந்தி
|
11 Jan 2023 11:02 PM GMT

12-ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண் பெறாவிட்டாலும், ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20 சதவீத மாணவர்கள் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஐ.டி.களில் சேரலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) நுழைவுத்தேர்வை எழுதுவதற்கு, மாணவர்கள் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இதில் தளர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தளர்வு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

20 சதவீத மாணவர்கள்

அந்தவகையில் ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20 சதவீத மாணவர்கள், அவர்கள் 12-ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஐ.ஐ.டி.களில் சேரலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் டாப் 20 சதவீத மாணவர்கள் மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்த முதல் 20 சதவீதத்தினர் பட்டியலில் வரும் மாணவி அல்லது மாணவர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர் என அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

தொடர் விவாதம்

மாநில கல்வி வாரியத்தில் பயின்றவர்களில் முதல் 20 சதவீத மாணவர்கள் 75 சதவீதம் அல்லது 350 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றதால் இந்த வாய்ப்பை பெற முடியாமல் இருந்த நிலையில், அது தொடர்பாக நடந்த தொடர் ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே முதற்கட்ட ஜே.இ.இ. (மெயின்) தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தேர்வு வருகிற 24 மற்றும் 31-ந்தேதிக்கு இடையே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வை இந்த மாத இறுதியில் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை மும்பை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்