< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
|29 Nov 2023 6:56 PM IST
இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது
புதுடெல்லி,
2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது
இந்த நிலையில்,ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ,ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும்.