< Back
தேசிய செய்திகள்
தக்காளி விலை விரைவில் குறையும் - மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் தகவல்
தேசிய செய்திகள்

'தக்காளி விலை விரைவில் குறையும்' - மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் தகவல்

தினத்தந்தி
|
28 Jun 2023 4:48 AM IST

தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் கோரக்பூரிலும், கர்நாடகத்தின் பெல்லாரியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.122-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் சிங், 'தக்காளி என்பது மிகவும் அழுகக்கூடிய பொருள். திடீர் மழை பெய்த பகுதிகளில் அதன் வரத்து பாதிக்கப்பட்டது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது. இது வழக்கமாக ஆண்டில் இந்த நேரத்தில் ஏற்படும் பருவகால நிகழ்வு. தக்காளி விலை விரைவில் குறையும்' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்