< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: குழந்தைகளுக்கு எச்சரிக்கை..!
|10 July 2022 9:38 AM IST
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கோழிக்கோடு,
கேரளா மாநிலத்தின் சில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எந்த மாவட்டத்திலும் தக்காளிகாய்ச்சல் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றும், இந்த நோய் குறைவான ஆபத்து கொண்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.