< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி
|1 Dec 2022 7:56 AM IST
குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
அகமதாபாத்,
குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்த வேண்டும். முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும்' என்றார்.