< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
|20 Feb 2024 6:49 AM IST
காரைக்கால் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா இன்று இரவு நடக்கிறது.
காரைக்கால்,
காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"காரைக்கால் மஸ்தான் சாகிப் கந்தூரி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் இந்த விடுமுறைக்கு பதிலாக வருகின்ற மார்ச் 9-ந் தேதி பள்ளி நடைபெறும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.