சித்ரதுர்காவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
|சித்ரதுர்காவில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா-
சித்ரதுர்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளின் மீது மரங்கள் முறிந்து விழுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் சித்ரதுர்காவில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, நேற்று (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை நேற்று மாவட்ட கலெக்டர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். மேலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.