< Back
தேசிய செய்திகள்
வீட்டுமனை பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரி கைது
தேசிய செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரி கைது

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

வீட்டுமனை பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் சர்ச் சமுதாய பவன் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது சகோதரர் பாஸ்கர். இவருக்கு சொந்தமான இடம் சொரப் பகுதியில் உள்ளது. இந்தநிலையில், மஞ்சுநாத் தனது சகோதரருக்கு சொந்தமான வீட்டுமனைக்கு பட்டா வழங்க சொரப் நகர சபையில் விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் அரசு அதிகாரி சந்திரகலா என்பவரிடம் பரிசீலனைக்கு சென்றது. அவர் வீட்டுமனை பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என மஞ்சுநாத்திடம் கூறினார். இதற்கு மஞ்சுநாத் மறுப்பு தெரிவித்தார். பின்னர் அதிகாரியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதற்கு மஞ்சுநாத் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் மஞ்சுநாத் சிவமொக்கா லோக் அயுக்தா போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அவரிடம் லோக் அயுக்தா போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மஞ்சுநாத்திடம் வழங்கினர். மேலும், சில அறிவுரைகளை கூறி அனுப்பினர். இதையடுத்து அவர் நகரசபை அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த அதிகாரி சந்திரகலாவிடம் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மஞ்சுநாத் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் சந்திரகலாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்