காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க இடர்பாட்டு சூத்திரம் வகுக்க வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி
|காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க இடர்பாட்டு சூத்திரம் வகுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
காவிரி விவகாரம் குறித்து கா்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இடாபாட்டு சூத்திரம்
மழை பற்றாக்குறையாக பெய்யும்போது காவிரி பிரச்சினை எழுதுகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இத்தகைய சூழ்நிலை வந்தது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், இரு மாநில முதல்-மந்திரிகளை அழைத்து பேசினார். ஆனால் அந்த கூட்டங்கள் தோல்வியில் முடிந்தன. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு படி ஏற வேண்டிய நிலை வந்தது.
நான் சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று காவிரி வழக்குகளை அணுகினேன். அதே போல் தற்போது உள்ள அரசும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமெனில் இடர்பாட்டு சூத்திரத்தை வகுக்க வேண்டும். 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூத்திரத்தை மத்திய அரசு வகுக்க வேண்டியது அவசியம்.
முழு அடைப்பு
அதன்படி சரியான முடிவு எடுக்க வேண்டும். நமது உரிமைக்காக போராட்டங்கள், முழு அடைப்பு நடக்கின்றன. மக்கள் தாமாக முன்வந்து முழு அடைப்பு நடத்துகிறார்கள். அதன் மூலம் மக்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணப்பா கூறினார்.