< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி
தேசிய செய்திகள்

குஜராத்தில் காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி

தினத்தந்தி
|
8 Aug 2023 2:15 AM IST

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் இடம்பெற்று உள்ளன.

ஆமதாபாத்,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் இடம்பெற்று உள்ளன.

இந்த கட்சிகள் குஜராத்தில் தொகுதி பங்கீடு அடிப்படையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என மாநில ஆம் ஆத்மி தலைவர் இசுடான் காத்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த தேர்தல் கூட்டணி குஜராத்திலும் செயல்படும். இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது தொடக்க நிலையில் இருந்தாலும், குஜராத்தில் இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு உடன்பாட்டின் கீழ் இணைந்து போட்டியிடும்' என தெரிவித்தார். அனைத்தும் எங்கள் திட்டப்படி அமைந்தால், குஜராத்தில் இந்தமுறை மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பா.ஜனதாவால் வெல்ல முடியாது எனவும் காத்வி கூறினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரசின் தலைமையே முடிவு எடுக்கும் என அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி தெரிவித்தார்.

அதேநேரம் இந்த கூட்டணியால் தங்கள் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாது என பா.ஜனதா கூறியுள்ளது.

மேலும் செய்திகள்