< Back
தேசிய செய்திகள்
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

Image Courtacy: ANI

தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2023 12:35 AM IST

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிதியை விடுவிக்கக்கோரி கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில மந்திரிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தன்று அவரது நினைவிடத்தில் நடந்த இந்த போராட்டம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்து உள்ளார்.

மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 25 லட்சம் போலி அட்டைகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.

மேற்கு வங்காள அரசு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய நிதியில் பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்