< Back
தேசிய செய்திகள்
திருப்பதி வெங்கடாசலபதிக்கு 2 கிலோ எடையில் தங்க ஆபரணம் காணிக்கை - அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்
தேசிய செய்திகள்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு 2 கிலோ எடையில் தங்க ஆபரணம் காணிக்கை - அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்

தினத்தந்தி
|
20 Dec 2022 4:53 AM IST

திருப்பதி வெங்கடாசலபதிக்கு அறங்காவலர் குழு தலைவர் 2 கிலோ எடையில் தங்க ஆபரணம் காணிக்கை வழங்கினார்.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி இருவரும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு 2 கிலோ 12 கிராம் 500 மில்லி கிராம் எடையில் தங்கக் கந்தாபரணத்தை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.

திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞானப்பீடத்தில் சீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் வெற்றிகரமாக முடிந்ததையொட்டி தங்க கந்தாபரணத்தை காணிக்கையாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்