< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமலை செல்லும் வழியில் மலைக்குன்றின் மீது ஏழுமலையானின் உருவம் ; பக்தர்கள் பரவசம்
|11 Oct 2022 10:24 AM IST
திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் வழியில்மலைக்குன்றின் மீது ஏழுமலையானின் உருவம் தெரிவதாக பக்தர்கள் பரவசம் அடைந்து உள்ளனர்.
திருப்பதி
திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள மலைக்குன்றின் மீது ஏழுமலையானின் உருவம் தென்படுவதாகக்கூறி அங்கு வழிபடுவதை பக்தர்கள் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
சிலரோ அதீத பக்தி காரணமாக சுமார் 3,000 அடி உயர மலைக்குன்றின் மேல் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஏறி ஏழுமலையான் உருவத்திற்கு பிரமாண்ட மாலை அணிவித்து அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.