< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
2023-24ம் நிதியாண்டிற்கான திருப்பதி கோவில் பட்ஜெட் - 4 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
|22 March 2023 11:02 PM IST
திருப்பதி கோவிலில் உண்டியல் காணிக்கையாக மட்டும் 1,591 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி,
2023-24 நிதியாண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருவாய் 4 ஆயிரத்து 411 கோடியே 68 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கோவில் நிர்வாகம் மதிப்பீடு செய்துள்ளது. இதில் உண்டியல் காணிக்கையாக மட்டும் 1,591 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ள பணத்திற்கு கிடைக்கும் வட்டி 990 கோடி ரூபாய், பிரசாத விற்பனை மூலம் 500 கோடி ரூபாய், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் 330 கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம், தேவஸ்தான ஊழியர்களுக்கு ஊதியமாக 1,530 கோடி ரூபாயும், பொருட்கள் கொள்முதலுக்கு 690 கோடி ரூபாயும் செலவாகும் என கோவில் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.