< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் விற்பனை - ஒரு மணி நேரத்தில் ரூ.19.35 கோடி வருவாய்
|25 April 2023 11:13 PM IST
தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்பதிவு அடிப்படையில் 300 ரூபாய்க்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது.
தொடங்கிய சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன. சுமார் ஒரு மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், கோவில் நிர்வாகத்திற்கு 19 கோடியே 35 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.