< Back
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - இன்று தொடக்கம்
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
18 Sept 2023 2:01 AM IST

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி நடைபெறுகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று18-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் அக்டோபர் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை(இன்று) உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர், விஸ்வகேசவர் முன்னிலையில், கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட தர்பை மற்றும் சணல் கயிற்றால் கருடன் சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்படும்.

பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர அரசு சார்பில் முதல்-மந்திரி ஜெகன்மோகன், கோவிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்