திருப்பதியில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
|திருப்பதியில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவியில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1 முதல் 20 வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை நாளை காலை 10 மணிக்கு பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.