< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மோசடியை தடுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம்
|18 Oct 2023 4:07 AM IST
மோசடியை தடுப்பதற்காக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பக்தர்களுக்கான அனைத்துச் சேவைகளும் கிடைத்து வந்தன. அதில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. அந்த இணையதள முகவரியில் சிலர் போலியான முகவரியை தொடங்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அதைத் தடுக்கும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை https://ttdevasthanams.ap.gov.in என மாற்றி அறிவித்துள்ளது.