< Back
தேசிய செய்திகள்
வாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் நிர்ணயிக்க கால அவகாசம்; ஐகோர்ட்டுக்கு, அரசு பதில்
தேசிய செய்திகள்

வாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் நிர்ணயிக்க கால அவகாசம்; ஐகோர்ட்டுக்கு, அரசு பதில்

தினத்தந்தி
|
21 Nov 2022 9:25 PM GMT

தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் வாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் வசூலிக்க கால அவகாசம் வேண்டும் என ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

பெங்களூரு:

கூடுதல் கட்டணம்

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை ஆட்டோ சேவை வழங்கி வருகின்றன. அந்த ஆட்டோக்களில் பயணிக்க வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த சேவைக்கு அரசு தடை விதித்தது. மேலும், இந்த நிறுவனங்களின் வாடகை ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்கும் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையே அந்த நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு கர்நாடக ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம்(அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கட்டணத்தை நிர்ணயிக்குமாறு கோர்ட்டு கூறியது.

கால அவகாசம்

ஆனால் அதற்கு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, தனியார் வாடகை ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கையில், வாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் நிர்ணயிப்பது குறித்து வருகிற 25-ந் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை காலஅவகாசம் அளிக்குமாறும் கேட்கப்பட்டது. இதையடுத்து பேசிய நீதிபதி, அரசு சார்பில் விரைவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதை கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்