< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமைதி, சகோதரத்துவத்திற்கான நேரம் இது - பிரதமர் மோடி
|13 Oct 2023 12:46 PM IST
அமைதி, சகோதரத்துவத்திற்கான நேரம் இது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா ஜி20 அமைப்பின் தலைமை வகிக்கும் நிலையில் இந்த மாநாட்டை இந்திய நாடாளுமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கனடா பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி, இது அனைவரும் வளர்ச்சியடைவதற்கான காலம், இது அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் அனைவரும் இணைந்து முன்னேறி செல்வதற்கான காலம். ஜி20 தலைமை இந்தியாவுக்கு ஆண்டு முழுமைக்கும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இந்தியா நிலவில் தரையிறங்கியதும் கொண்டாட்டத்தை அதிகரித்தது' என்றார்.